ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Update: 2022-11-05 18:45 GMT

நாகை மாவட்டம் நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவில் நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெய்கிருஷ்ணன், 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரேவதி விஜயன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்