கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

வள்ளியூர் அரசு பள்ளியில் ரூ.31.82 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-02-02 19:44 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி மேம்பாட்டு திட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை குழந்தை நேய பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.31.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா, துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்கலம் என்ற கோமதி, கண்ணன், பொறியாளர் கணபதிராமன், செண்பகவள்ளி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, தி.மு.க. செயலாளர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்