மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சியில் மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி விளாங்கல் சாலையில் வசித்து வந்தவர் நெடுஞ்செழியன் (வயது 50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு பிரீத்தி என்ற மகளும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், பிரீத்தி சென்னையில் ஒரு வங்கியிலும் வேலை பார்த்து வருகிறார்கள். பிரித்திக்கு துணையாக அம்பிகா சென்னையில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
இந்த நிலையில் நெடுஞ்செழியன் நேற்று முன்தினம் இரவு தனது ஓட்டு வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.