மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விகடன், வீட்டுமனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 149 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 2 திருநங்கைகளுக்கு ஆடுகள் வளர்க்க தலா ரூ.24 ஆயிரம் காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.