புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது

Update: 2023-06-24 20:42 GMT


அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவின தொகையை திரும்ப கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அரசு ஆணைகள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடு்க்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கில் வருகிற 30-ந் தேதி மதியம் 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்து அதன் மீது விருதுநகர் இணை இயக்குனர், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்