லால்குடி கோட்டாட்சியர் உள்பட3 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது

லால்குடி கோட்டாட்சியர் உள்பட3 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-12 19:29 GMT

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தனி நபர், அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் பசுமை சாதனையாளர் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை பயன்படுத்துதல், துாய்மை பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டவர்கள் பசுமை சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பம் செய்தனர். அதில் திருச்சி லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சங்கீதா, சனமங்கலம் ஊராட்சிதலைவர் சீ.ஹேமலதா ஆகியோர் பசுமை சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று பசுமை சாதனையாளர் விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சினி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அதிகாரி சாகுல்அமீது மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் கோட்டாட்சியர் வைத்தியநாதன் லால்குடி கோட்டத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்