சேலம் மாவட்டத்தில் ஜல்லி, கிரஷர் கல்குவாரிகள் வேலைநிறுத்தம்-குவாரியிலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம்

சேலம் மாவட்டத்தில் ஜல்லி, கிரஷர் கல்குவாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குவாரியிலேயே சமைத்து சாப்பிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-30 21:22 GMT

ஓமலூர்:

ஜல்லி, கிரஷர் கல்குவாரிகள்

சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜல்லி, கிரஷர்கள் இயங்கி வருகின்றன. கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்களுக்கு அரசு விதிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையை தளர்த்த வேண்டும்.

சமூக ஆர்வலர்கள் போர்வையில் கல்குவாரிகளின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சேலம் மாவட்ட ஜல்லி கிரஷர் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

சமையல் செய்து போராட்டம்

இந்தநிலையில் கல்குவாரிகளில் இயக்கப்படும் டிப்பர் லாரிகள் ஓமலூர் பைபாஸ் ரோடு பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் டிரைவர், கிளீனர், பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள், கல்குவாரிகளிலேயே தங்கி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்குவாரிகள் போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்