சிமெண்டு விற்பனை முகவராக மானியத்துடன் கடன் வழங்கல்

சிமெண்டு விற்பனை முகவராக மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

Update: 2022-11-18 19:00 GMT

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து 30 சதவீதம், அதாவது ரூ.90 ஆயிரம் மானிய தொகையும், மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களது புகைப்படம், சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி., பான் கார்டு, முகவரி ஆதாரம் ஆகிய சான்றுகளுடன் தாட்கோ இணையதளமான http://application.tahdco.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445029470 செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்