கிராமசபை கூட்டம்

கடையநல்லூர் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது;

Update:2022-11-02 00:15 IST

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொடிகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உடையார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தெட்சணாமூர்த்தி முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ், பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்