மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் இறந்தாா்.

Update: 2023-07-13 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் அருண்பாண்டியன்(வயது 25). எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், தனது வீட்டின் பின் பகுதியில் கொட்டகை அமைப்பதற்காக தகர ஷீட்டை தூக்கிச் சென்றார். அப்போது அருகில் இருந்த வீட்டிற்கு செல்லும் மின் ஒயரில் தகர ஷீட் உரசியதால் மின்சாரம் தாக்கி அருண்பாண்டியன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்