மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்: அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை...!

திருவாரூரில் தவறாக நடந்து கொள்வதாக மாணவிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-31 06:21 GMT

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு கணித ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி என்பவர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக 8-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் குழந்தைகள் உதவி மையத்தை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட புகார் எதிரொலியாக, கணித ஆசிரியர் கார்த்தியசாமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்