மதுபோதையில் காைர ஓட்டிச்சென்ற அரசு அதிகாரி

மதுபோதையில் காைர ஓட்டிச்சென்ற அரசு அதிகாரி

Update: 2022-09-07 11:56 GMT

சேவூர்

அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த மனோகரன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு அலுவலக பணி முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் கார் வந்த போது சத்தியமங்கலம் சாலையில் செல்லாமல் கோபி சாலையில் தாறுமாறாக காரை ஓட்டிசென்று அங்கு நடந்து சென்றவர்கள் மீதும் பிற வாகனங்கள் மீதும் மோதுவது போல சென்று நிலை தடுமாறி கார் சென்றுள்ளது.

இதைபார்த்த பொதுமக்கள் உடனடியாக காரை ஓட்டி சென்றவரை பிடித்து சேவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை விசாரித்த போது அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. ஒரு அரசு அதிகாரி இது போன்று நடந்து கொண்டது கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சேவூர் போலீசார் இவர் மீது வழக்கு ஏதும் பதியாமல் அவரது உறவினரை வரவழைத்து காரை ஒப்படைத்து அவரை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இவர் அரசு அலுவலர் என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். இது பொதுமக்களிடையே அதிருப்தியை எற்படுத்தியுள்ளது. எனவே மது போதையில் காரை ஓட்டி வந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்