கூடலூர் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் தொடக்கம்

கூடலூர் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் தொடக்கம்

Update: 2023-02-19 18:30 GMT

கூடலூர்

கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூடலூர் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜூனன் வரவேற்றார். "மாணவர்கள் நாளைய எதிர்காலம் " என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் பேசினார். மேலும் நுண்ணுயிரியல் துறை தலைவர் சண்முகம் "நான் முதல்வன் திட்டமே மாணவர்களின் நம்பிக்கை " என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சுரேஷ்குமார், இளநிலை உதவியாளர் சார்மிலி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்