டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்..

கவர்னர் ஆர்.என்.ரவி தனது பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார்.

Update: 2023-07-12 17:00 GMT

கடந்த 7-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல், உள்ளிட்டவை குறித்து கவர்னர் விவாதித்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை அரசு வக்கீலை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் விவகாரத்தில் சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக எதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளார்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது பயணத்தை முடித்து கொண்டு இன்று இரவு சென்னை திரும்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்