காந்தி நினைவு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை
மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.;
சென்னை,
உத்தமர் காந்தியடிகளின் 76-வது நினைவு நாளானது, தேச அளவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, சகோதரத்துவம் ஆகிய காந்தியின் லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக உள்ளன, என்று கூறினார்