கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்..!

கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.

Update: 2023-06-23 02:38 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி பயணத்தை முடித்து ஜூன்-27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்