அரசுத்துறை வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அரசுத்துறை வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-15 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து துறையிலும் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனம் வழங்க வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் தர ஊதியம் வழங்க வேண்டும். கல்வித் தகுதி உள்ள ஓட்டுனர்களுக்கு பதவி மாறுதல் வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி மகாராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் மாரிசாமி, மாவட்ட துணைத் தலைவர் அழகிரி, துணைச்செயலாளர் ரகுபதி, அமைப்புச் செயலாளர் துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்