நீச்சல் போட்டியில் 19 பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 19 பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Update: 2022-11-07 19:01 GMT

கரூரில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 10 தங்கம், 3 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் ெவன்று முதலிடம் பெற்றனர். இதையடுத்து அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், அமுதா ஆகியோரை திருக்காம்புலியூர் ஒன்றிய கவுன்சிலர் கல்பனா செந்தில்குமார், பள்ளியின் தலைமையாசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்