அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவிகள்

அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தை அரசு பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-11-18 19:03 GMT

பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க கரூர் மாவட்ட காவல்துறையின் புதிய திட்டத்தின் படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் நேற்று அரசு போலீஸ் நிலையத்தை பார்வையிட்டனர். அப்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகள், முதல் தகவல் அறிக்கை, கணினி செயல்பாடுகள், ஆயுத அறை போன்ற அனைத்தையும் கேட்டு தெரிவித்தனர். அப்போது, அவர்களுக்கு அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை எடுத்துக் கூறினார். ஏட்டு பிரியா, பெண் போலீஸ் பரமேஸ்வரி ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பதை விளக்கினர். மேலும் மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன. அப்போது, பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்