அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-12-02 15:59 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 4-ந்தேதி வரை பல மாவட்டங்களில் மழை, கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

உதவிக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - 1070. மாவட்ட உதவி எண் - 1077, வாட்ஸ்-அப் - 9445869848, பெருநகர சென்னை மாநகராட்சி - 1913 ஆகிய உதவி எண்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Tags:    

மேலும் செய்திகள்