புதிரை வண்ணார் நலவாரியத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதிரை வண்ணார் நலவாரியத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update:2023-08-04 18:43 IST

சென்னை,

புதிரை வண்ணார் நலவாரியத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிரை வண்ணார் நல மக்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும். இதனை கண்காணிக்கவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும். 3 சட்டமன்ற உறுப்பினர்கள், 10 சமூக ஆர்வலர்கள் / கல்வியாளர்கள் உட்பட 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆக மொத்தம் 26 உறுப்பினர்களை கொண்டு புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தியமைத்து அரசாணை (நிலை) எண்.102. ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை, நாள் 03.08.2023-இல் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்