அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-02 18:33 GMT

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பி.பிரபாகர் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்கச் செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில், தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க தலைவர் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஓய்வு பெற்ற அரசு இணை இயக்குனர் கலிவரதன், இந்திய மருத்துவர் சங்க திருப்பத்தூர் கிளை செயலாளர் வினோதினி, உள்பட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்திய மருத்துவ சங்க பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்