அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-28 16:59 GMT

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஏ.சி.சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதில் இணை செயலாளர் அண்ணாமலை, துணைத்தலைவர்கள் அன்பரசன், தனசேகரன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடைகளுக்கு புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு ெதாகுப்பு வழங்கிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும்.

பதிவாளர் சுற்றறிக்கையின்படி எடையாளர்களில் இருந்து விற்பனையாளர் பதவி உயர்வும், விற்பனையாளர்களிலிருந்து அலுவலக எழுத்தர் பதவி உயர்வும் உடனடியாக வழங்கிவிட்டு நியாய விலை கடை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பணியில் இருக்கும் போது இறந்த நியாய விலை கடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்