அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
வேடசந்தூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
வேடசந்தூரில் அரசு ஊழியர் சங்க வேடசந்தூர் கிளையின் 16-வது வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட கிளை தலைவர் நாட்ராயன் தலைமை தாங்கினார். வட்ட கிளை துணை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ஜெயபால் தொடக்க உரையாற்றினார். வட்ட கிளை செயலாளர் நந்தகோபால் வேலை அறிக்கை வாசித்தார். வட்ட கிளை பொருளாளர் சுரேஷ்குமார் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், தொகுப்பூதிய முறையை ஒழிக்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.