அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.;

Update:2022-10-11 00:05 IST

கரூரில் நேற்று அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் டாக்டர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்களான டாக்டர் சரவணன், டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் வரவேற்று பேசினர். மருத்துவத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், இதர மருத்துவத் துறை பணியாளர்கள் ஆகிய அனைத்து காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இருதயம், மூளை நரம்பியல், சிறுநீரகவியல் உள்ளடக்கிய உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை துறைகளை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மருத்துவ சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்