பொங்கலுக்கு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க முடிவு

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்

Update: 2022-11-19 07:45 GMT

சென்னை,

பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,காந்தி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு பொங்கலுக்கு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . பல நிறங்களில் 15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்