புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து
கானலாபாடி- திருவண்ணாமலை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கானலாபாடியில் இருந்து ஐங்குணம், சோமாசிபாடி வழியாக திருவண்ணாமலை வரை செல்லும் வழியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளும் உள்ளன.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் மேற்கண்ட ஊர்களுக்கு வந்து செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
இதையடுத்து அவரது நடவடிக்கையின் பேரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கானலாபாடியில் இருந்து ஐங்குணம், சோமாசிபாடி வழியாக திருவண்ணாமலை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினரால் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா கானலாபாடியில் நடந்தது.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை பணிமனை கிளை மேலாளர் பாஸ்கர், தொ.மு.ச மாநில பேரவை செயலாளர் சவுந்தரராஜன், செயலாளர்கள் ரங்கராஜன், மனோகர், உதவி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாசுப்பிரமணி, ஒன்றிய தி.மு.க. பொருளாளர் சுப்பராயன், ஒன்றிய மாணவரணி செயலாளர் லோகநாதன், கிளை செயலாளர்கள் வெங்கடேசன், பச்சையப்பன், கருணாகரன், சிவகுமார், கிளை பிரதிநிதி சீனுவாசன், ஊராட்சி பிரதிநிதி தர்மராஜன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், வார்டு உறுப்பினர் செல்வசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.