அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் சாவு

சங்கரன்கோவில் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் இறந்தார்.

Update: 2023-08-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் நம்பிராஜன் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி திவ்யா. இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நம்பிராஜனும், அவரது மனைவி திவ்யாவும் சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் குருக்கள்பட்டியில் உள்ள வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நெல்லை சாலையில் உள்ள சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நம்பிராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான்குளம் போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்