தலைவாசல்:
தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது57). அரசு பஸ் டிரைவர். நாவலூரில் இருந்து தலைவாசல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆசைதம்பி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.