ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி பரிமளா (வயது 40). இவர் மோகனூரில் இருந்து கரூருக்கு அரசு பஸ்சில் வந்தார். பின்னர் கரூர் பஸ் நிலையத்தில் இறங்கிய பரிமளா தனது கைப்பையை பார்த்தார். அப்போது, அதில் அவர் வைத்திருந்த தங்கசங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5¼ பவுன் தங்கநகைகள் திருட்டுபோனது தெரியவந்தது. இது குறித்து பரிமளா கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.