கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி கீழபுதூர் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது 46). இவர் நேற்று முன்தினம் ெபட்டவாய்த்தலை அருகே சிறுகமணியில் உள்ள அரசாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி சாந்தகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து ெசன்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.