அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2023-05-10 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

அழகு பார்வதி அம்மன் கோவில்

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுரண்ைட அழகு பார்வதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் அரண்மனை தெரு தேவர் சமுதாய மண்டகப்படி, 2-ம் நாள் மேலத்தெரு தேவர் சமுதாய மண்டகப்படி, 3-ம் நாள் செட்டியார், பிள்ளைமார் சமுதாய மண்டகப்படி, 4-ம் நாள் அம்மன் கொண்டாடி நாடார் மண்டகப்படி, 5-ம் நாள் சேனைத்தலைவர் மண்டகப்படி, 6-ம்நாள் வன்னியர் சமுதாய மண்டகப்படி, 7-ம் நாள் கோட்டைத்தெரு தேவர் மண்டகப்படி, 8-ம் நாள் அனைத்து சமுதாயத்திற்குமான பொது மண்டகப்படி நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில், அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்டம்

9-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரானது கோட்டை தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, சுரண்டை நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) சப்தாவரண நிகழ்ச்சி, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நடக்கிறது. ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்