திருப்புறம்பியம் முத்துமாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக விழா
திருப்புறம்பியம் முத்துமாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக விழா
சுவாமிமலை அருகே திருப்புறம்பியத்தில் உள்ள முத்துமாரியம்மன், அய்யனார் கோவிலில் கோடாபிஷேக விழா கடந்த ஏப்ரல் 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகபடிகாரர்களின் கோடாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகமும், கஞ்சி வார்த்தலும், வாணவேடிக்கையும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.