கீரனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கீரனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

Update: 2022-10-20 19:12 GMT

ஆட்டுச்சந்தை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஜவுளிகடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கீரனூரில் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் அதிகாலையிலேயே இருந்து சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை கொண்டு வந்து விவசாயிகள் சந்தையில் இறக்கினர்.

ரூ.50 லட்சத்துக்கு விற்பனை

ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் சந்தையில் குவிந்திருந்தனர். இதனால் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது. பின்னர் மதியம் வரை நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.50 லட்சம் வரையில் ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் கூறினர். இதனால் புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. உடனடியாக அங்கு வந்த கீரனூர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்