லாரி மோதி 3 ஆடுகள் சாவு

Update: 2022-09-21 17:05 GMT

லாரி மோதி 3 ஆடுகள் சாவு 

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஐதராபாத்திற்கு தொட்டிக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா நகர் கருங்கரடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) ஓட்டி வந்தார்.

இந்த லாரி நேற்று மதியம் 1.30 மணிக்கு நத்தக்காடையூர் - காங்கயம் பிரதான சாலை எலந்தக்காட்டுப்பதி பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் கூட்டத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 3 ஆடுகள் செத்தன.

மேலும் டிரைவர் ஆறுமுகம் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி வந்தார். இந்த லாரி முள்ளிப்புரம் - சித்தம்பலம் கிராம சாலையில் கொன்னபாளையம் பிரிவு அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆறுமுகம் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். மேலும் லாரியின் முன்புற கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது.மேலும் லாரியில் இருந்து தொட்டிக்கரி மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்