விருதுநகரில் கோலப்போட்டி

விருதுநகரில் கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-01-07 18:40 GMT


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகம் மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த ேபாட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் அருப்புக்கோட்டை விஜயராணி முதல் பரிசினையும், விருதுநகர் சிவஸ்ரீ 2-வது பரிசினையும், சிவகாசி கல்லூரி மாணவி கற்பகவல்லி 3-வது பரிசினையும் பெற்றனர். விருதுநகர் கல்லூரி மாணவி ரட்சிதா, அருப்புக்கோட்டை கற்பகவல்லி ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் டாக்டர் சுசீலா வழங்கி சிறப்புரையாற்றினார். ஓய்வுபெற்ற பேராசிரியை சாந்தி, ரோட்டரி சங்க நிர்வாகி வடிவேல் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்