காரைக்குடி,
காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி அங்குள்ள சிவன்கோவில் பகுதியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த கோலப்போட்டியில் அங்குள்ள பெண்கள் உற்சாகமாக கலந்துகொண்டு பல்வேறு விதமான வண்ண, வண்ண கோலமிட்டனர். இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.