யானைக்கால் நோய் பாதித்தவர்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு
யானைக்கால் நோய் பாதித்தவர்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
யானைக்கால் நோய் பாதித்தவர்களின் வீடுகளுக்கு சென்றுசுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரணமல்லூர் வட்டார சுகாதார நிலையத்தின்கீழ் மடம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆணை போகி சுகாதார நிலையம், பெரிய கொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் யானைக்கால் நோய் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது. அவ்வாறு நிதி அனுப்பப்படுவது வங்கிகணக்கில் சேர்ந்துள்ளதா என்பதை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று செய்யாறு மாவட்ட பூச்சியியல் வல்லுனர், துரைராஜ் தலைமையில் ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் வட்டார மருத்துவர் அருள் குமார், டாக்டர் சக்தி பூரணி வட்டார மேற்பார்வையாளர் புஷ்பநாதன் வட்டார சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இவ்வாறு 51 பேர் வீடுகளுக்கு சென்று ஆய்வுசெய்த அவர்கள் நோய் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்/