வதான்யேஸ்வரர் கோவிலில் கோ- கஜ பூஜை

புத்தாண்டை முன்னிட்டு வதான்யேஸ்வரர் கோவிலில் கோ- கஜ பூஜை;

Update:2023-01-03 00:15 IST

மயிலாடுதுறையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் யானை, ஒட்டகம், குதிரை, பசு ஆகியவற்றிற்கு கஜ பூஜை, ஒட்டக பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை ஆகியவை பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி, அம்பாள், தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்