அரசு பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-06 18:45 GMT

உச்சிப்புளி புதுமடத்தில் இருந்து ராமநாதபுரம் அரண்மனைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன்பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சதக் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் வீசிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இந்த கல்வீச்சில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமானது. இதுகுறித்து பஸ் டிரைவர் பால்பாண்டியன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்