பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-05 18:31 GMT

ஆரணி

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி நகர போலீஸ் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமையில் நடந்தது. டவுண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் கலந்துகொண்டு குழந்தை திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். மேலும் அவர் பள்ளிக்கு வரக்கூடிய மாணவ மாணவிகள் செல்போன் கொண்டு வரக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே வர வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும் பட காட்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளுடனும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் ஜோதி செல்வராஜ், தாளாளர் பூபதி, நிர்வாகிகள் பி.கே.ஜி.லோகநாதன், சங்கரன், ரேணு, ரவி மற்றும் ஆசிரியர்கள், பெண் காவலர்கள் அனுசுயா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்