கீழப்பாவூர் யூனியன் கூட்டம்

கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.;

Update:2023-04-26 00:15 IST

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவி சீ.காவேரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், யூனியன் தலைவி காவேரி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சுரண்டை சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, சுரண்டை நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யூனியன் துணைத் தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்