பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவி காவேரி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் முத்துக்குமார், ஆணையாளர்கள் கண்ணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினா்.
கவுன்சிலர் மகேஸ்வரி:- கழுநீர்குளம் பஞ்சாயத்து தெற்கு கழுநீர்குளத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதன் அருகில் புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.
கவுன்சிலர் முருகேசன்:- குறும்பலாபேரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பிட வசதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கவுன்சிலர் நாகராஜன்:- ஆண்டிபட்டி பஞ்சாயத்து சுப்பிரமணியபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். மலைராமர் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.