காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை விழா

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது.

Update: 2023-05-19 09:29 GMT

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பகல், இரவு என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் வைகுண்ட பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவில் 3-ம் நாளான நேற்று கருட சேவை விழா விமரிசையாக நடைபெற்றது. வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மஞ்சள் பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பிறகு பெருமாளுக்கு வேத மந்திரங்கள் ஓத கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்று பக்தி கோஷமிட்டனர். மேளதாளங்கள் முழங்க நான்கு ராஜ வீதிகளில் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்