வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை

தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை நடைபெற்றது.;

Update:2022-06-13 00:38 IST

வைகாசி விசாகத்தையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உற்சவ மூர்த்திகளான வரதராஜர், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். வரதராஜ பெருமாளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. வீதியுலாவின் போது பக்தர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் தீபாராதனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்