வள்ளியூர்:
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜை, சுவாமி பல்ேவறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. 5-ம் நாள் அன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.