ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
திருவட்டார் அருகே ஆட்டோ வாங்கும் ஆசை நிறைவேறாததால் ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே ஆட்டோ வாங்கும் ஆசை நிறைவேறாததால் ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜவுளிக்கடை ஊழியர்
திருவட்டார் அருகே உள்ள தேமானூர் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சுபி (32) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
சுனில்குமார் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
ஆட்டோ வாங்க...
ஜவுளி கடையில் அதிக வேலை பளு காரணமாக மாற்று வேலை செய்ய சுனில்குமார் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டலாம் என முடிவு செய்து மனைவியிடம் கூறியுள்ளார்.
அதற்கு சுபி ஏற்கனவே கடன் சுமையாக உள்ளதால் சிறிது காலம் ஜவுளிக்கடையிலேயே வேலைக்குச் செல்லுமாறும், தற்போது ஆட்டோ வாங்க வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக சுனில்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுனில்குமாரை சாப்பிடுவதற்கு மனைவி அழைத்துள்ளார். அப்போது, நான் எலி மருந்து சாப்பிட்டு விட்டேன் எனக் கூறிபடி மயங்கி விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுபி உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுனில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுபி திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி விரைந்து சென்று சுனில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.