சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2022-10-17 19:45 GMT

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கட்சி தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா பூங்காவில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா உருவ சிலைக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் மணி, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, சரோஜா, பட்டு ராமச்சந்திரன், கொண்டலாம்பட்டி முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன் உள்பட பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்