குப்பைகளை கையாளும் முறைகளை தூய்மை மக்கள் இயக்கத்தினர் பார்வையிட்டனர்

காயல்பட்டினத்தில் குப்பைகளை கையாளும் முறைகளை தூய்மை மக்கள் இயக்கத்தினர் பார்வையிட்டனர்.

Update: 2022-06-26 13:57 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகரசபையில் செயல்பட்டு வரும் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தினர் நகரசபை பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வீடுகளின் குப்பைகளை கையாளும் முறைகளை பார்வையிட்டனர். அப்போது மங்கள விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஐ.எல்.எஸ் காம்பவுண்டு பகுதியில் வசிக்கும் பெயின்டர் மீரான் என்பவர் வீட்டிற்குச் சென்றனர். அங்கு வீட்டில் உள்ள கழிவு குப்பைகள் மற்றும் செடியில் உள்ள கழிவு இலைகளை கொண்டு பழுதடைந்த பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்தி செடிகள் வளர்த்து வருவதை பார்வையிட்டு அவரை ஊக்குவிக்கும் விதமாக செடிகளுக்கு தேவையான நவீன உரங்களை நகரசபை தலைவர் முத்து முகமது, ஆணையாளர் சுகந்தி ஆகியோர் வழங்கினர். நகரசபை துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, கவுன்சிலர்கள் சுகு, அபுபக்கர் சித்திக், ரோசியா பானு, ஆஸியா‌ மஹ்மிதா, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் நகர மக்கள் இயக்கத்தினரும் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்