குப்பையில் உரம் தயாரிக்கும் பணி

செஞ்சியில் குப்பையில் உரம் தயாரிக்கும் பணி நடந்தது.

Update: 2023-02-09 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதை பேரூராட்சி செயல் அலுவலர்கள் அரகண்டநல்லூர் அருண்குமார், செஞ்சி ராமலிங்கம், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, உரம் தயாரிக்கும் திட்டம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளர் பார்கவி, மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்